Tuesday, November 19, 2024

என் கார் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டாலே ஆறுபடையும் வந்துவிட்டதா சொல்லுவாரு விஜய் சேதுபதி – நடிகர் யோகி பாபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் யோகிபாபு காமெடியனாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் ஹீரோவாகவும் காமெடிப் படங்களில் மட்டுமில்லாமல் அழுத்தமான கதைக்களங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் அடுத்ததாக யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள ‘போட்’ படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ளார். முன்னதாக வடிவேலுவின் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, விஜய்யின் ‘புலி’ உள்ளிட்ட படங்களை இவர் கொடுத்துள்ளார்.

இதனிடையே, யோகிபாபு சமீபத்திய பேட்டியில், நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய காரில் தான் அமரும் சீட்டை தொட்டு கும்பிட்டு தன்னுடைய காரை மூன்று முறை வலம்வருவார் என்று யோகிபாபு தெரிவித்துள்ளார். தன்னுடைய கார் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டாலே ஆறுபடையும் வந்துவிட்டதாக விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூறுவார்கள் என்றும் யோகிபாபு கூறியுள்ளார். கண்ணுக்கு தெரியாத ஜாதிக்கு பின்னால் ஓடுவதை காட்டிலும் கண்ணுக்குத் தெரியாத சாமி பின்னால் ஓடினால் நல்லதுதான் நடக்கும் என்றும் யோகிபாபு இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News