Saturday, September 14, 2024

உங்களுக்கு என் இசை பிடித்தால் ஆதரவு தாருங்கள் இல்லையென்றால் திட்டாதீர்கள்… மனம் திறந்த‌ ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா ரகுமான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில்லு கருப்பட்டி, ஏலே ஆகிய படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது அவர் இயக்கி உள்ள திரைப்படம் ‘மின்மினி’. 2015-ஆம் ஆண்டு இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறியவர்களை மையமாக வைத்து இந்தக் கதை உருவாகி உள்ளது. இதற்காக இந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களை, இளைஞர்களாக வளரும் வரை 7 ஆண்டுகள் காத்திருந்து நடிக்க வைத்துள்ளார் ஹலிதா.

மின்மினி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜா பேசுகையில் ‛‛இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் நான் தயாராக இல்லை. ஆனால் ஹலிதா விடாப்பிடியாக நான் தான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் இந்த படத்திற்கு நான் தான் இசையமைப்பாளர் என அறிவித்த போது நிறைய டுவீட்களை பார்த்தேன். திறமையான நபர்கள் பலர் இருந்தபோதும் என்னை எதற்கு தேர்வு செய்தீர்கள் என பலரும் கமென்ட் செய்தனர். அது என்னை மிகவும் பாதித்தது. இதற்காகவே நம் இயக்குநருக்கு நாம் பெருமை சேர்த்து கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கடுமையாக உழைத்தேன். உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள், இல்லையென்றால் வலைதளங்களில் மோசமாக திட்டாதீர்கள்” என்றார்.

- Advertisement -

Read more

Local News