சமீபத்தில் தன்னை பற்றிய வதந்திகள் மோசமாக சமூக ஊடகங்களில் உலா வந்த நிலையில், காட்டமான பதிலை அளித்திருந்த நடிகை மீனா, தற்போது சூப்பர் கூல் மோடுக்கு மாறியுள்ள வீடியோ ஒன்றை நடிகை சங்கீதா கிருஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



குழந்தை பருவத்திலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், பார்த்திபன், சரத்குமார், விஜயகாந்த், மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.


இந்நிலையில், நடிகை சங்கீதா மீனாவுடன் ரெட்டை ஜடை போட்டுக் கொண்டு சுட்டி சிறுமிகளை போல சேட்டை செய்யும் செம க்யூட்டான வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன.