நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் ‘தி மெட்ராஸ் மிஸ்டரி’ வெப் தொடரில் நடித்துள்ளார் நஸ்ரியா. இதில் சாந்தனு, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை ஏ. எல். விஜய் தயாரிக்க, சூர்யா பிரதாப் இயக்குகிறார்.

1940களின் பின்னணியில், உண்மை சம்பவமான லஷ்மி காந்தன் கொலை வழக்கை மையமாகக் கொண்டு கதை உருவாகியுள்ளது.
ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாக இருக்கும் இந்த தொடரின் லைன் அப் வீடியோவுடன் ‘தி மெட்ராஸ் மிஸ்டரி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.