Saturday, September 14, 2024

இன்று வெளியாகி திரையரங்குகளை ஆக்கிரமித்த ஆறு படங்கள்…என்னென்ன பார்ப்போம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘போட்’. இந்த பட இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதைப் போல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

‘கூழாங்கல்’ படத்தினை தயாரித்த லேர்ன் அண்ட் டீச் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. இந்த படத்தினை பாரி இளங்கோவன் இயக்கி நடித்துள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். படம் கூத்துக் கலைஞர்களைப் பற்றியது என்பதால் இளையராஜா தனது இசையில் படத்தை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக படத்தின் இயக்குநர் பாரி இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூத்துக் கலைஞர்களை மையப்படுத்திய பல படங்களுக்கு இளையராஜா இசை அமைத்து அந்த படங்களின் இசை அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

நடிகர் நகுலின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை ஆர்.ஜி.கே என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். படத்தில் ஆர்த்தனா பினு, கே.எஸ். ரவிக்குமார், பயில்வான் ரங்கநாதன், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க டார்க் காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதால் படம் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்கும் என படக்குழு நம்புகின்றது. இந்த படமும் இன்று வெளியாகின்றது.

விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தினை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கு அச்சு ராஜமணி மற்றும் விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளனர். ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படமும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

நடிகை காயத்ரி, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் பேய் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராமச்சந்திரன் என்பவர் இந்த படத்தினை இயக்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு வழங்கும், ‘மீசையை முறுக்கு’ படத்தில் நடித்த ஆனந்த், எழுதி இயக்கியுள்ள படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இந்த படத்தில் குமரவேல், ஆர்.ஜே. விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், கே.பி.ஒய். பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படம் பள்ளி நண்பர்கள் அனைவரும் ஒருங்கிணையும் நிகழ்வை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. காமெடி மற்றும் எமோஷன் என ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக இந்த படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த படமும் இன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News