சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்த சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருதுகளை வென்றது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட பல விருதுகளை அந்த படம் பெற்ற நிலையில், அதன் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் ஜூலை 12ம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதே நாளில் அக்ஷய் குமார் நடித்த சர்ஃபிரா படத்தை வெளியிட முடிவெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அக்ஷய் குமாருக்கு கம்பேக் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியன் 2 உடன் மோத சூர்யா திட்டமிட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தி பீல்டில் இந்தியன் 2க்கு கடும் போட்டியை அக்ஷய் குமாரின் சர்ஃபிரா உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, கமலுனின் படத்துக்கு போட்டியாக தனது தயாரிப்பு படத்தை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்க்காத சூழலில் இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது.இந்த படத்தில் சூர்யாவும் கேமியோ ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.