விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதமானதால் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் அஜித். குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் கடந்த மாதமே துவங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங் நடப்பெற்று வருகிறது.
இன்றைய தினம் இந்த படத்தில் அஜித்தின் இன்ட்ரோ பாடலுக்கான சூட்டிங் துவங்கியதாக கூறப்படுகிறது. இநத் பாடல் காட்சிக்கான சூட்டிங் வரும் 7ம் தேதி வரை நடைபெறும் எனவும் இதையடுத்து அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் ஜப்பான் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் அஜித் இடையில் இடைவெளி எடுத்துக்கொண்டா மீண்டும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணையுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படம் குறித்து மகிழ் திருமேனி அளித்துள்ள பேட்டியில் கிட்டத்தட்ட முக்கால் வாசி சூட்டிங் நிறைவுபெற்றது எனவும் மீதமுள்ள சூட்டிங், இம்மாதம் துவங்கவுள்ளதாக கூறியிருக்கிறார்.படத்தில் சில காட்சிகள் அஜித்திற்கு திருப்தியை தரவில்லை என்றால் தான் அதை மீண்டும் ரீ-சூட் எடுத்து ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆக்சன் என்டர்டெயினராக உருவாகி வரும் விடாமுயற்சி படம் தொடர்ந்து சூட்டிங் தாமதமானாலும் படத்தின் அவுட்புட் சரியாக அமைந்து வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங்கின் ஒவ்வொரு காட்சிக்கும் அதிக காலத்தை மகிழ் திருமேனி எடுத்துக் கொள்வதாகவும் இதுவும் ஷூட்டிங் தாமதத்திற்கு காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.