Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அமிதாப் பச்சன்-க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த மரியாதை… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடை பெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பிரபலங்கள் வரவழைக்கப்பட்டனர்.கடந்த ஆறு மாதங்களாக இந்த திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் திருமண விழாக் கொண்டாட்டத்தில் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து நடனமாடினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக உலா வந்தது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.இதனால் திருமண விழா நட்சத்திரங்களால் ஜொலித்தது எனலாம். தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா ஜோதிகா, விக்கி நயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட அமிதாப் பச்சனைச் சந்தித்த ரஜினிகாந்த் உடனே அமிதாப் பச்சனை நோக்கி வேகமாகச் சென்று அவரது காலில் விழுந்து வணங்க சென்ற சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது காலில் விழுகின்றார் என்பதை உணர்ந்த அமிதாப் பச்சனும் உடனே அதை தடுத்து அவரிடம் பேசினார் இந்த வீடியோ இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.

- Advertisement -

Read more

Local News