Tuesday, November 19, 2024

அன்போட முதல் புள்ளியாக 96-ஐ வைத்துக் கொண்டால் ‘மெய்யழகன்’ இரண்டாவது புள்ளி… கார்த்தியின் மெய்யழகன் குறித்து இயக்குனர் பிரேம்குமார் சுவாரஸ்யம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ’96’ படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரேம்குமார். சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷினி, சுவாதி கொண்டே, ஶ்ரீரஞ்சனி, இளவரசு, சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி, ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் வருகிற செப்டம்பர் 27ம் தேதி வெளிவருகிறது. தற்போது படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது.

படம் பற்றி இயக்குனர் பிரேம்குமார் பகிர்ந்துள்ளார். அதாவது அடிப்படையான அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம். இவ்வுலகில் வெறுப்பு என்பது பழகிபோன ஒன்றாகி விட்டது. என்னுடைய ’96’ படம் காதல் படம் இல்லை. அதுவும் அன்பை போதிப்பது தான். அதில் ரொமான்ஸ் கிடையாது. அன்போட முதல் புள்ளியாக ’96’ வைத்துக் கொண்டால் ‘மெய்யழகன்’ இரண்டாவது புள்ளி. அன்பை விதைக்கிறதுக்கான முயற்சி தான் என் முதல் வேலை. மத்ததெல்லாம் அப்புறம்தான்.

இப்படி ஒரு நல்ல முயற்சியாக ‘மெய்யழகன்’ இருக்கும். தஞ்சாவூர் நீடாமங்கலத்தில் நடக்கிற கதை. இரண்டு பேருக்கு இடையில் நடக்கிற உரையாடல் மனமாற்றம் தான் படம். ‘மெய்யழகன்’ சொந்த ஊரை ஞாபகப்படுத்துவான். நாம் பேச வேண்டாம்னு நினைச்சவங்க கிட்ட மன்னிப்பு கேட்க தோணும். படத்தை பார்த்தவர்களிடமிருந்து அன்பு வெளிப்படும் என பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News