‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லீயுடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். தற்காலிகமாக ‘AA22xA6’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது குழு அபுதாபியில் அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சாய் அபயங்கர், “அல்லு அர்ஜுன் – அட்லீ இயக்கும் ‘AA22xA6’ படத்திற்கு நான் இசையமைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இவ்வளவு பெரிய படத்தைப் பெறுவது ஒரு பெருமை; அதற்கான தகுதியை நிரூபிக்க வேண்டும்” என்றும் கூறினார். இதன்மூலம், சாய் அபயங்கர் தான் அல்லு அர்ஜுன் – அட்லீ படத்திற்கான இசையமைப்பாளராக உறுதிசெய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், அவர் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்திற்கும் இசையமைத்துள்ளார்.