Tuesday, November 19, 2024

அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித் குமார்… ஏன் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் அஜித் குமார், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் குமார் ஜோடியாக திரிஷா நடிப்பதாக தெரிகிறது. இவர்களுடன் நடிகர் அர்ஜுன் மற்றும் ஆரவ், நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News