மலையாள திரைப்படமான ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், ஃபகத் பாசில் நடித்துள்ள ஆவேஷம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ஃபகத்தின் சிறப்பான நடிப்பால் வெற்றியடைந்தது.

பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனை (ஃபகத்) சந்திக்கின்ற மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் ஏற்படும் பிரச்சினைகளைக் கதை மையமாகக் கொண்டது.இந்த படம் முதல் 5 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்து சாதனை படைத்தது, மேலும் சமீபத்தில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்தது. தற்போது ரூ.150 கோடியை எட்டியுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பகத் பாசில் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வழங்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதையை சாந்தி மாயதேவி எழுதியுள்ளார். இவர் முன்னதாக திரிஷ்யம் 2 மற்றும் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.பகத் பாசில் ஜீது ஜோசப்புடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும். திரிஷ்யம் பட இயக்குனர் பகத் பாசலை வைத்து உருவாக்கும் இந்த புதிய படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.