Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விரைவில் விடுதலை 2 ! அமெரிக்கா பறக்கும் வெற்றி மாறன்… எதற்கு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படம், தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தியது. முதல் பாகம், படத்தின் கதைக்களம், பாத்திரங்கள், அரசியல் பின்புலம் ஆகியவற்றைக் கட்டமைத்து, அந்தப் படம் பார்வையாளர்களை அந்தப் பட உலகிற்குள் அழைத்துச் சென்றது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர, இரண்டாம் பாகத்திலும் அதே தரத்தை எட்ட படக்குழு உழைத்து வருகிறது. காமெடி நடிகரான சூரி, முதல் பாகத்தில் கதையின் வலிமையான நாயகனாக வலம் வந்தார். இதேபோல், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஷ்ரீ போன்றோரும் தங்கள் பாத்திரங்களில் முக்கியமாக இயங்கினர். இளையராஜாவின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராக இருந்தாலும், சூரியின் கதாபாத்திரமே மையமாக இருந்தது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் இளமைக் காட்சிகளுக்காக டீ-ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்துகின்றனர்.

பெருமாள் வாத்தியார் கம்யூனிசத்தில் எப்படி தீவிரமாக ஈடுபட்டார் என்பதை, அவரது இளமைக் காலம், திருமணம், கொள்கை போன்ற பல விஷயங்களை இந்தப் படம் பேசவிருக்கிறது. விஜய் சேதுபதியுடன் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சில நாட்கள் நடைபெற்றது. தற்போது தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் அங்கு நடித்து வருகின்றனர். பீட்டர் ஹெய்னின் அதிரடி சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. தென்காசியில் இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும், தற்போது அங்கே கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து டீ-ஏஜிங் தொழில்நுட்பத்திற்காக வெற்றிமாறன் அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ளார். விரைவில் ‘பாகம் 2’க்கான படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பணிகள் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News