Tuesday, September 17, 2024

விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தில் இணைந்துள்ள ஜனனி… மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

நடிகை ஜனனி இலங்கையின் பிரபல ஊடக நிறுவனத்தில் பணியாற்றியவர். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.இது அவரது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜனனிக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கிய நிலையில் விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.இப்போது, ஜனனி விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

தற்போது, நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் ‌”Train” படத்தில் ஒரு பங்கு வகிப்பதாக ஜனனி தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பிற்காக இயக்குநர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இந்த பதிவு வைரல் ஆகியுள்ளது. ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் விஜய் சேதுபதியும் படக்குழுவினரும் கேக் வெட்டிக் கொண்டாடினர்.விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News