Tuesday, November 19, 2024

ரசிகர்களை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சக்தி அவரிடம் உள்ளது… கேம் சேன்ஜர் பட அப்டேட் கொடுத்த ஷங்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்குப் படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. ‘இந்தியன் 2’ படத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த தெலுங்குப் படத்தை இயக்க ஆரம்பித்தார் ஷங்கர். அதன்பின் ‘இந்தியன் 2’ சிக்கல் தீர்ந்த பிறகு இரண்டு படங்களிலும் பணிபுரிய ஆரம்பித்தார். அதன் காரணமாக ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பும் நீண்டு கொண்டே போனது.

இந்நிலையில், நேற்று ‘இந்தியன் 2’ படத்தின் நிகழ்ச்சி ஒன்று ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் ஷங்கர், 1990களில் எனது முதல் படத்திலிருந்தே தெலுங்கு ரசிகர்கள் எனக்கு நல்ல ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள். அதனால்தான் தெலுங்குப் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரணுடன் இணைந்தேன். இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டது. படத்திற்கு இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. அதன்பின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்தபின் நல்ல தேதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

ராம் சரண் திரையில் சிறப்பாக நடிக்கக் கூடிய ஒரு நடிகர். ரசிகர்களை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சக்தி அவரிடம் உள்ளது. சக்தி வாய்ந்த வெடிப்பில் அந்த சக்தி கட்டவிழ்த்து விடத் தயாராக உள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படம் வெளிவந்தவுடன் அதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்,” என்று பேசியுள்ளார். அதேபோல் ராம் சரணின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டிற்குள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News