மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் ஷரிதா ராவ். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். ‛ஆற்றல், படவா, தேடி தேடி பார்த்தேன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கதையின் நாயகியாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இதில் அவர் அறிமுக நடிகர் ராஜ் அய்யப்பா ஜோடியாக நடிக்கிறார். ராஜன் ரவி இயக்குகிறார். மிஸ்டர் பிக்சர்ஸ ஸ்டூடியோ சார்பில் ஜெயலட்சுமி, காந்தாரா ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது.
