Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிறந்தநாளன்று நடிகர் டெல்லி கணேஷுக்கு ஜோராக நடைப்பெற்ற சதாபிஷேக விழா… #DelhiGanesh

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல குணசித்திர நடிகரான டெல்லி கணேஷ், பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானார். 1981ம் ஆண்டு வெளியான எங்கம்மா மகாராணி படத்தில் ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ், தமிழ் சினிமாவில் அதிகமாக நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு நடிகர்களும் தமிழ் சினிமாவில் தங்களுக்கான தனித்துவ அடையாளத்துடன் உள்ளனர். டெல்லி கணேஷின் அசாத்திய நடிப்புத் திறமையால், கமல்ஹாசனின் பல படங்களில் அவர் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராஜன், நாயகன், அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். அதேபோல், ரஜினிகாந்த் உடன் இணைந்து பொல்லாதவன், படிக்காதவன், ராகவேந்திரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

80 வயதாகும் நடிகர் டெல்லி கணேஷ், இந்த வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த ஆண்டு வெளியான விஷாலின் ரத்னம் மற்றும் மிகப்பெரிய வெற்றி பெற்ற அரண்மனை 4 மற்றும் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் இன்று தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு சதாபிஷேக விழாவை நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News