Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் DUDE படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ படங்களின் வெற்றியால் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இந்த இரு படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்ததால், அவர் வணிக ரீதியாகவும் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்பொழுது, பிரதீப் ரங்கநாதனின் நான்காவது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்க, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார்.

இந்த நிலையில், படத்திற்குப் ‘Dude’ (டியூட்) எனத் தலைப்பு வைக்கப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் இந்த ஆண்டின் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News