Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிக்பாஸ் 8வது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்பு குறைவா ? வெளியான புதிய தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது ‘தக் லைப்’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் கமல். அடுத்து ‘இந்தியன் 3’ படத்திற்கான சில நாள் வேலைகளும் இருக்கும் என்கிறார்கள். அடுத்து ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் படம் முழுவதும் வரப் போகிறாராம். அதற்கான படப்பிடிப்புகளிலும் அவர் கலந்து கொள்ள வேண்டும். எனவே, தன்னால் 8வது சீசனை தொகுத்து வழங்க முடியாது என டிவி நிர்வாகத்திடமும், ஷோ தயாரிப்பாளர்களிடமும் சொல்லிவிட்டார் என தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் கமல்ஹாசனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என கடுமையாக முயற்சித்து வருகிறார்களாம். இந்த 8வது பிக் பாஸ் சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் கமல் கால் பதிப்பாரா இல்லையா என்பது போக போக தான் தெரியும்.

- Advertisement -

Read more

Local News