புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய படம் ‘பார்க்கிங்’. இந்த படம் ஹரிஷ் கல்யாணுக்கு அவரது திரையுல பயணத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. வெறும் 4 கோடிகளில் உருவாக்கப்பட்ட இந்த படம் 20 கோடிகள் வசூலித்தது.இப்போது, இயக்குனர் ராம்குமார் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை மற்றும் தலைப்பை தயார் செய்துள்ளார்.

மிக விரைவில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கான தலைப்பையும் பதிவு செய்துவிட்டார்.முதல் பாகத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் இருவரும் இந்த படத்தில் மீண்டும் நடிக்கின்றனர். இருவருக்கும் பார்க்கிங் சம்பந்தமாக நடக்கும் சண்டையை மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் ராம் குமார். சுபமாக முடிந்த முதல் பாகத்திற்குப் பிறகு அடுத்த பாகத்தின் கதை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை.ஹரிஷ் கல்யாணின் கேரக்டருக்கு மோதலாக ‘நோ பார்க்கிங்’ என்று இரண்டாம் பாகத்திற்கு பெயரிட்டுள்ளனராம்.

இது முதல் பாகத்தில் பார்க்கிங் செய்ததால் ஏற்பட்ட சண்டையைப் போலவே ‘நோ பார்க்கிங்’ என்பதால் மீண்டும் சண்டையின் தொடக்கம் எனலாம். இதனால் கதை எந்தவிதமாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.இப்போது ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் பெரிய நடிகர்கள் கதை கேட்கின்றனர். தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்களுக்கு கதை எழுதும் முயற்சியில் இருக்கிறார் இந்த இளம் இயக்குனர். பெரிய நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டால் இரண்டாம் பாகத்தை முடிக்கலாம் என்று எண்ணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
