தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் நிரோஷா. தற்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் கோமதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000043336.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000043339-1024x923.png)
ஒரு அண்மைய பேட்டியில் நிரோஷா கூறியது, நான் பல சீரியல்களில் நடித்திருக்கிறேன். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸில் கோமதியாக ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. தெருவில் நடந்து செல்லும் போது கூட கோமதி என்று அழைத்து ஆலோசனை கூறுகின்றனர். என் அம்மா பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்துவிட்டு ‘நீயா இப்படியெல்லாம் நடிக்கிற?’ என்று கேட்கிறார்.இ
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000043345-1024x559.png)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000043341-1024x589.png)
நிரோஷா முன்பு சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீண்டும் புகழை பெற்றுள்ளார்.