அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல், விஜய்யின் அரசியல் கட்சியான தவெகவின் ஆந்தமாக கூட பயன்படும் அளவிற்கு மிகவும் பிரபலமாகியது. இந்த பாடலை எழுதியவர் பாடலாசிரியர் விவேக். விவேக், விஜய்யின் ‘சர்க்கார்’, ‘பிகில்’, ‘பீஸ்ட்’, ‘வாரிசு’ போன்ற பல படங்களுக்கான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
39 வயதான விவேக், சாரதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், சமீபத்தில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான சினிமா பிரபலங்கள் பங்கேற்று, விவேக் மற்றும் அவரது மனைவியை வாழ்த்தினார்கள்.
விவேக்கின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, அவரது வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு, வாழ்த்துக்களை தெரிவித்தார். குட்டி பாடலாசிரியர் பிறக்கப் போகிறாரா அல்லது அழகான தேவதை பிறக்கப் போகிறாரா என ரசிகர்கள் ஆர்வமாகக் கேட்டு, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இயக்குநர் அட்லீயும் அந்த நிகழ்ச்சியில் விஜய்யுடன் கலந்து கொண்டார்.