நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை இன்று மட்டும் திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 28 ஆண்டுகள் கழித்து இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படத்தில் கமலுடன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் கலந்துகொண்டார். சீமான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கமல்ஹாசனுடன் படம் பார்த்த சீமான், திரைக்கலை அறிவியலின் அற்புதமான குழந்தை. பொழுதுபோக்கு படமாக அல்லாமல் நல்ல பொழுதாக அமையும் படம். ஒவ்வொரு தோற்ற மாறுதலுக்கும் உடல்மொழியை மாற்றி கமல் நன்றாக நடித்துள்ளார். நமது பிரச்னையை சரிசெய்ய இறைதூதர் வரமாட்டார். நாம்தான் இறங்கி செய்ய வேண்டும். நீ உன் வீட்டை சுத்தம் செய் உலகம் மாறுமென படம் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார்” என்றார்.