பிரபல நடிகர் ஜெயராமின் மகனாகிய காளிதாஸ் ஜெயராம் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தனுஷின் “ராயன்” திரைப்படத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணை காதலிக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக வளர்ந்தது. அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியீட்டு வைரலானது.

இருவரின் காதலுக்கு இரு குடும்பங்களும் ஒப்புதல் அளித்திருப்பதால், விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஜெயராமின் திருமண அழைப்பிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது குடும்பத்துடன் சந்தித்து வழங்கினார்.