Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

டாணாக்காரன் இயக்குனருடன் இணையும் கார்த்தி…கார்த்தி30 அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வா வாத்தியார் மற்றும் மெய்யழகன் படங்களில் நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் நடித்துள்ளார் கார்த்தி, இந்த இரு படங்களும் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. சர்தார் 2 படத்திலும் இணைந்துள்ள அவர், கார்த்தி30 படத்திலும் தற்போது கமிட்டாகியுள்ளார்.

கார்த்தி, தனது கேரக்டருக்குப் பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுப்பதில் முனைப்பாக உள்ளார். மெய்யழகன் படத்தின் சூட்டிங் முடிந்துள்ளதால், அதன் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். விக்ரம்பிரபு நடித்த டாணாக்காரன் படத்தை இயக்கிய இயக்குநருடன் கார்த்தி கைகோர்க்கிறார்.டாணாக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

கார்த்தி 30 படமானது 1960களில் நடைபெறும் பீரியட் படமாக உருவாகும் எனவும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் பூஜை, சூட்டிங் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி, தன் படங்களை சரியான திட்டமிடலுடன் கமிட் செய்து வருவதால் அவருக்கு என்றுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News