Tuesday, November 19, 2024

சிம்புவின் #STR48 படத்திற்கு என்னதான் ஆச்சு? உலாவும் புது தகவல்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனம் சில படங்களைத் தயாரிப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வினோத் இயக்கத்தில் ‘கமல்ஹாசன் 233’, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனின் 234வது படமாக ‘தக் லைப்’, ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசனின் 237வது படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’, சிலம்பரசன் நடிக்கும் 48வது படம் என அறிவிப்புகள் வந்தன.

அவற்றில் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த 233வது படம் ஏறக்குறைய கைவிடப்பட்டது. அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள 237வது படம் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை. ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. டப்பிங் வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகப் போகிறது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசனின் 48வது படத்தின் தயாரிப்பிலிருந்து கமல்ஹாசன் ஏற்கெனவே விலகிவிட்டதாக செய்திகள் வந்தன. அதற்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை. இருந்தாலும் கமலும், சிம்புவும் சுமூகமாகப் பேசி முடிவெடுத்தார்கள் எனச் சொல்கிறார்கள். சரித்திரப் படமாக உருவாக உள்ள படத்தின் சில போஸ்டர்களைக் கூட வெளியிட்டபின் கமல்ஹாசன் விலகியதன் பின்னணியில் படத்தின் பட்ஜெட் தான் காரணமாம். ஏற்கெனவே, ‘அமரன்’ படத்திற்கான பட்ஜெட் எதிர்பார்த்ததை விடவும் அதிகமானால் கமல் அப்செட்டாக இருந்தாராம். இந்நிலையில் அந்தப் படம் சிம்புவின் 50வது படமாகத் தயாராக உள்ளதாம். கமல்ஹாசனுக்குப் பதிலாக அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இதற்கிடையே சிம்புவின் 49வது படத்தை மலையாளப் படமான ‘2018’ படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி சோஜப் இயக்க உள்ளாராம். ‘தி கோட்’ படத்தைத் தயாரித்து வரும் எஜிஎஸ் நிறுவனம் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டதாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடித்த பின் தனது 50 படத்தை தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு தொடர்வார் என பல தகவல்கள் உலாவருகின்றன.

- Advertisement -

Read more

Local News