ரன்வீர் சிங் முதலில் ல் கூலி படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார். அவருக்கு லோகேஷ் சொன்ன கதை மிகவும் பிடித்து, பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தன.
இந்நிலையில், சமீபத்திய தகவலின் படி, ரன்வீர் சிங் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று சம்பளமும் மற்றும் மற்றொன்று லோகேஷ் கேட்ட கால் ஷீட்-ஐ கொடுக்க முடியாத சூழ்நிலை போன்ற காரணங்களால் ரன்வீர் சிங் இப்போது இப்படத்தில் நடிக்க முடியாது என்று தீர்மானித்துள்ளார்.
எனவே, ரன்வீர் சிங் கூலி படத்தில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.பான் இந்தியா படத்தில் பாலிவுட் நடிகர் இல்லாவிட்டால் எப்படி என்பதால் லோகேஷ் தற்போதைய வேறொரு ப்ளான்-ஐ கையில் எடுத்துள்ளார். அதாவது விரைவில் ஒரு முன்னணி இளம் நடிகர் இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.