தமிழ் சினிமா இசையில் இளையராஜாவின் இசை வரலாற்றை எவராலும் அழிக்க முடியாத ஒன்று. ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து இன்று உலகம் முழுவதும் அறிந்த இசை ஞானியாக அவர் இன்றும் ஜொலித்து கொண்டிருக்கிறார். முதன்முதலில் அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது இசை பயணம் இன்றும் நீண்டுகொண்டே இருக்கிறது. அடுத்ததாக விடுதலை 2 படம் வரவிருக்கிறது விடுதலை முதல் பாகத்தில் தனது இசையால் படத்திற்கு மெருகூட்டி இருந்தார் இசைஞானி இளையராஜா.அப்படத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் அளித்த ஒரு பேட்டியில், “என் அப்பா சினிமா பாடல்களை நன்றாக பாட கூடியவர். எங்கள் அம்மாவும் அதேமாதிரி தான். இவர்கள் காணும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இப்படியான சூழலில்தான் வளர்ந்தேன். எங்கள் வீட்டில் அந்தகாலத்தில் கேசட் கிடையாது. அதனால் பக்கத்து வீட்டில்தான் கேட்கணும். அந்த மாதிரி நிழல்கள் படத்தின் கேசட்டை கேட்டு வாங்கினோம்.
எங்கள் பக்கத்துவீட்டில் ஒரு அண்ணன் அந்த பாடலை போட்டார். அன்று இரவு முழுவதும் அந்த பாடல்களை கேட்டுக்கொண்டே இருந்தோம். நான் சாப்பிடக்கூட இல்லை இளையராஜாவை நான் மட்டும் ஆச்சரியமாக பார்க்கவில்லை எல்லாரும் பார்க்கிறார்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளவராக இருக்கிறார். காதலுக்கு எம்.எஸ்.வி தேவை என்பது போல் இளையராஜா காதல் தோல்விக்கு தேவைப்பட்டார் என மிஷ்கின் அவருடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.