அக்ஷய் குமாரின் ‘வேல்கம் டு தி ஜங்கிள்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துவரும் சஞ்சய் தத் கருத்து மோதலால் அப்படத்தில் இருந்து விலகியுள்ளார் என கூறப்படுகிறது.படப்பிடிப்பு திட்டமிடாத முறையில் நடைபெறுவது குறித்து சஞ்சய் தத் அக்ஷய் குமாரிடம் தன் புறநிலை எடுத்து கூறியதாகத் தெரிகிறது.
மேலும், கதை திருப்பங்கள் மற்றும் படப்பிடிப்பின் கால்ஷீட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவர் விலகியுள்ளாராம்.இந்நிலையில், சஞ்சய் தத் ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பதால், தயாரிப்பாளர்கள் தற்போது அவர் மீண்டும் திரும்பினால் என்ன செய்யலாம் அல்லது அவரை மாற்றிவிட்டு படப்பிடிப்பை தொடர்வது என குழப்பத்தில் இருக்கின்றனர்.
படத்தில் சுனில் ஷெட்டி, திஷா பதானி, ரவீனா டாண்டன், லாரா தத்தா, அஃப்தாப் ஷிவ்தாசானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், பரேஷ் ராவல், ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வர்சி, ஜானி லீவர், ராஜ்பால் யாதவ், மிகா சிங், முகேஷ் திவாரி, ஜாகிர் ஹுஸ்ஸான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அமகது கான் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் டிசம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.