பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இந்த ஆண்டு விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யப்பின் திருமணம் சமீபத்தில் பாலிவுட்டில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ஏகப்பட்ட பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று ஆலியா மற்றும் அவரது கணவரை வாழ்த்தினர்.
மற்றும் அவரது கணவர் ஷேன் கிரிகோயர் இருவரும் தீவு ஒன்றில் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக தங்கள் தேனிலவை கொண்டாடி வரும் நிலையில், அதன் புகைப்படங்களை ஆலியா காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ஆலியா காஷ்யப் யூடியூபராக பிரபலமான அவரது திருமணத்தை அனுராக் காஷ்யப் கடந்த டிசம்பர் 11ம் தேதி பாலிவுட்டே வியக்கும் வண்ணம் நடத்தி முடித்தார்.ஆலியா காஷ்யப் தனது கணவர் ஷேன் கிரிகோரியுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள நிலையில், அவர் பகிர்ந்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.