Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

என்றைக்கும் எங்கள் வீட்டில் ஒரு ரூல் இருக்கிறது – ஜோதிகா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோலிவுட்டின் பிரபலமான ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா. பல ஆண்டுகள் காதலித்து, காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். தற்போது மும்பையில் வசிக்கும் அவர்கள், திரைப்படங்களில் நடிப்பதில் மிக பிஸியாக உள்ளனர்.

சூர்யா, ஜோதிகாவுக்கு மிகுந்த ஆதரவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், சூர்யாவின் வீட்டில் அவர்களுக்கான‌‌ விதிமுறைகள் குறித்து ஜோதிகா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அதாவது எந்த அளவுக்கு பிஸியாக இருந்தாலும் வீட்டில் ஒரு நிபந்தனை உண்டு. மதிய மற்றும் இரவு உணவை அனைவரும் ஒன்றாகவே உட்கொள்ள வேண்டும். அதனால் அந்த இரண்டு நேரத்திலும், முழு குடும்பமும் ஒன்று கூடுவோம். மகள் தியா அப்பாவின் செல்லம். மகன் தேவ் எங்கள் இருவரிடம் மிகவும் பாசமாக இருக்கிறான்,” என்று ஜோதிகா கூறினார்.

- Advertisement -

Read more

Local News