Saturday, September 14, 2024

என்னை அவருடன் ஒப்பிடுவது அவரை அவமானப்படுத்துவது போன்றது – துல்கர் சல்மான் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். இவர் 2012ம் ஆண்டு வெளியான ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ‘தீவ்ரம்’, ‘பட்டம் போலே’, ‘சலலாஹ் மொபிலஸ்’, ‘வாயை மூடி பேசவும்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 27ல் வெளியாகிறது.

முன்னதாக துல்கர் சல்மானை ஷாருக்கானுடன் ஒப்பிட்டு இணையத்தில் செய்திகள் பரவின. இதற்கு கடந்த 2022ம் ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தின் இந்தி பதிப்பு வெளியீட்டின் போது செய்தியாளர் சந்திப்பில் துல்கர் சல்மான் விளக்கமளித்தார்.

அது குறித்து அவர் கூறுகையில், படத்திலும் சரி நிஜத்திலும் சரி, ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் நமக்கென்று ஒரு பெரிய முன்மாதிரி. என்னை அவருடன் ஒப்பிடுவது அவரை அவமானப்படுத்துவது போன்றது, ஏனென்றால் ஒரே ஒரு ஷாருக்கான் மட்டுமே இருக்க முடியும் என்றார். மீண்டும் இதேபோல் ஒப்பீடுகள் இணையத்தில் பரவிய நிலையில் அவர் ஒப்பீடு குறித்த விளக்கமளித்த செய்திகள் தற்போது வைரலாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News