Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இளையராஜா பிறந்தநாளையொட்டி வாழ்த்து போஸ்டரை வெளியிட்ட இளையராஜா பயோபிக் படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைஞானி இளையராஜா இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.திரைத்துறை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை ஒட்டி, ‘இளையராஜா’ பயோபிக் திரைப்பட குழு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் இசை மன்னனாக விளங்கும் இளையராஜா வாழ்க்கை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்க, தனுஷ் இளையராஜாவின் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தனியான இசையமைப்பாளர் இல்லாமல், இளையராஜாவின் சொந்த சிம்ஃபனிகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்களை நீங்கள் எனக்கு சொல்கிறீர்களே தவிர, என் மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. ரசிகர்களுக்காகத்தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்‌ எனக்கு அது இல்லை என்று உருக்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் இளையராஜா.

- Advertisement -

Read more

Local News