Saturday, September 14, 2024

இந்தியன் 2 படத்தோடு போட்டி போட வரும் ‘டீன்ஸ்’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் தொடர்ந்து புதிய மற்றும் வித்தியாசமான படைப்புகளை உருவாக்கும் இயக்குநர், நடிகர் பார்த்திபன். இவர் இயக்கிய முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றவர். இயக்கம் மட்டுமின்றி படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நிறைய திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தபடி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் இவர் தயாரித்து, இயக்கிய ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ பல விருதுகளை வென்றது. இதையடுத்து இவர் இயக்கி, தயாரித்த ‘இரவின் நிழல்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த சூழலில், இவர் இயக்கி, தயாரித்திருக்கும் அடுத்த படம் ‘டீன்ஸ்’. குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஜூலை 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.ஜூலை 12-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் இணைந்து உருவாக்கிய ‘இந்தியன் 2’ படம் வெளியாக உள்ள நிலையில், ‘டீன்ஸ்’ படமும் இதே நாளில் வெளியிடப்படவுள்ளது.

- Advertisement -

Read more

Local News