செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்.அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், ஏழாம் உலகம், மயக்கம் என்ன என செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான பல படங்கள் வரவேற்ப்பையும் வெற்றியையும் பெற்றன.
பிரபல நகைச்சுவை நட்ச்சத்திரங்களான வடிவேலு, சந்தானம் ஆகியோருடன் பணியாற்றிய நகைச்சுவை நடிகர் பாவ லட்சுமணன் ஒரு பேட்டியில் செல்வராகவன் குறித்து பேசியிருக்கிறார்.
நான் புதுப்பேட்டை திரைப்படத்தில் இரண்டு நாட்கள் நடித்தேன்.ஆனால் என்னை பார்த்து உனக்கு நடிக்கவே தெரியவில்லை என செல்வராகவன் கூறிவிட்டார்.
அதோடு நிறுத்தாமல் தவறான கெட்ட வார்த்தைகளால் அங்கு இருந்த பல பேர் முன்பே என்னை திட்டினார். எனக்கு மனசு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இனி இங்கு இருந்தால் சரிப்பட்டுவராது என நான் புறப்பட்டுவிட்டேன். செல்வராகன் இவருகிறார் என்றால் அனைவரும் ஓடிப்போய் ஒளிந்துகொள்வார்கள் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.