Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அடுத்தடுத்து படங்கள் வெளியானலும் என் வழி தனி வழி என வெற்றி நடைப்போடும் அந்தகன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தியாகராஜன் இயக்கத்தில், பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான படம் ‘அந்தகன்’. இப்படத்திற்கு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து, இரண்டு வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான ‘தங்கலான், டிமான்டி காலனி 2,’ மற்றும் கடந்த வாரம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான ‘வாழை’ உள்ளிட்ட படங்களின் போட்டிகளையும் சமாளித்து, இப்படம் இன்றும் ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சிகளாக வரவேற்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று விடுமுறை தினம் என்பதால், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆன்லைன் தளங்களில் பார்க்க முடிகிறது.

பிரசாந்திற்கு மீண்டும் ஒரு வெற்றி வாகை சூடுவதற்கான படமாக இது அமைந்துள்ளது. அடுத்த வாரம் விஜய்யுடன் பிரசாந்த் நடித்துள்ள “தி கோட்” படம் வெளியாவதை குறிப்பிட வேண்டிய ஒன்று.

- Advertisement -

Read more

Local News