Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அங்க சொதப்புனது மாதிரி இங்க சொதப்பாதீங்க! மகிழ் திருமேனிக்கு லைக்கா போட்ட கண்டிஷன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி வெளியானது அத்தோடு சரி இதுவரையிலும் படத்தை பற்றிய வேறு எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானிலிருந்து நடத்தப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் ஷூட்டிங் தடைப்பட்டது. ஏறத்தாழ படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் அஜர்பைஜானிலேயே மகிழ் திருமேனி ஷூட் செய்து முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும் அடுத்த லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதேசமயம் படப்படிப்பு தள்ளி போக மற்றொரு காரணம் அதிக செலவை மகிழ் திருமேனி இழுத்துவிட்டதுதான் எனவும் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது விடாமுயற்சி படக்குழு சென்னையில் இருக்கிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் துனுஷியாவில் நடக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.அஜர்பைஜானில் சொதப்பியது போல் துனிஷியாவில் சொதப்பக்கூடாது என்று மகிழ் திருமேனியிடம் லைகா தரப்பு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News