‘உமா மஹேஷ்வர உக்ரா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரூபா கொடுவாயூர், தற்போது தமிழ் சினிமாவில் தனது முதல் படமான எமகாதகி மூலம் அறிமுகமாகியுள்ளார்.
அதன்படி, பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில், மார்ச் 7ஆம் தேதி வெளியான ‘எமகாதகி’ திரைப்படத்தில், ரூபா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றுவருகிறது.
இதற்கிடையில், கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய ‘சாரங்கபாணி ஜாதகம்’ திரைப்படம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை மோகனகிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கியுள்ளார்.படக்குழுவின் சமீபத்திய அறிவிப்பின்படி, ‘சாரங்கபாணி ஜாதகம்’ திரைப்படம் அடுத்த மாதம் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.