ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ஒரு வலிமையான ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் டாம் குரூஸ். இவர் யாராலும் சாதாரணமாக செய்யமுடியாத ஸ்டன்ட் காட்சிகளை தானாகவே செய்வதன் மூலம் உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்றவர். சமீபத்தில் வெளியான அவரது ‘மிஷன்: இம்பாஸிபிள் – தி பைனல் ரெக்கானிங்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சி மூலம் டாம் குரூஸ், கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில், திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை மதித்து, ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’ நிறுவனம் அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருதை வழங்கும் என அறிவித்துள்ளது.
டாம் குரூஸுடன் இணைந்து, டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோரும் இக்கவுரவ ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. ‘கவர்னர்ஸ் விருது’ என அழைக்கப்படும் இவ் விருதை டாம் குரூஸ் பெறும் என்பது, அவர் 35 ஆண்டுகள் கழித்து இதனைப் பெறும் விதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

