அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில், விடாமுயற்சி எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் குட் பேட் அக்லி படம் சிறந்த விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிபெற்றது.

அந்தப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ளார் என்ற செய்தி ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு வெளியாவில்லை.
அஜித் தொடர்ந்து கார் ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று வருவதால் எப்போது இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது தீபாவளி தினத்தன்று அந்த புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.