Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

ஜெயிலரில் விநாயகன் அசத்தியதுபோல் வேட்டையனில் அசத்துவாரா சாபுமோன்? #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேட்டையன் திரைப்படம், ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்து. இப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ராணா மற்றும் பஹத் பாசில் ஆகியோரும் நடித்துள்ள நிலையில், வில்லனாக ராணா தான் நடித்துள்ளதாக உறுதியாகியுள்ளது. பஹத் பாசில் இப்படத்தில் கலகலப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சமீபத்தில் வெளியான டீசரில், மற்றொரு மலையாள வில்லன் நடிகர் சாபுமோன் அப்து சமது இப்படத்தில் தமிழில் அறிமுகமாகியுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. சாபுமோன், மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர். மலையாள சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இவர், 2018ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டைட்டில் வின்னராக கோப்பையைக் கைப்பற்றியவர் என்பது கவனிக்கத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் விநாயகன், பெரிதளவில் பேசப்பட்டார். அந்த வகையில், வேட்டையன் திரைப்படமும் சாபுமோனுக்கு தமிழில் மேலும் வாய்ப்புகளை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News