சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படம் தங்கக் கடத்தல் மாபியா சார்ந்துள்ள ஒரு பரபரப்பான கதை அமைப்பில் உருவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ‘கூலி’ படத்தின் ஆரம்பக் காட்சியில் உலகநாயகன் கமல் ஹாசனின் குரலை பயன்படுத்துவதற்காக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த முயற்சிக்காக, கமலுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அப்படி எல்லாம் சரியாக அமைந்தால், அடுத்த வாரம் கமல் ஹாசன் தனது குரலை பதிவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.