‘வா வாத்தியார்’ என்கிற படத்திற்குப் பெயர் வைக்கப்பட்ட நாளிலிருந்து அதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில், இப்படத்தின் வெளியீடு இன்னும் காலதாமதமாகவே இருக்கப் போகிறது என கோலிவுட்டில் பேசப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, கடந்த வருட மே மாதத்தில் தலைப்பும் அறிவிக்கப்பட்டது.
‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமிக்கு ஏழு வருடங்களுக்கு பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், படப்பிடிப்பு வேகமாக நடைபெறாமல் நீடித்துவந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது கூட படப்பிடிப்பு மேலும் 20 நாட்கள் நடத்த வேண்டியிருப்பதாக தகவல். இதற்கிடையில் தயாரிப்பாளர், இப்படத்திற்கு இவ்வளவு காலம் எதற்கென கேள்வி எழுப்புகிறார் எனக் கூறப்படுகிறது.
நடிகர் கார்த்தி, ‘சர்தார் 2’ படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டியதால், அதனை விரைவில் முடித்தார் எனத் தகவல். இதன் காரணமாக ‘வா வாத்தியார்’ வெளியாவதற்குள், ‘சர்தார் 2’ தான் முதலில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.