பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்து, 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. இப்படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான பெரும் வெற்றிப் பெற்ற திரைப்படமாக அமைந்தது. இதில் பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இதையடுத்து, சில வருடங்களுக்கு “சார்பட்டா பரம்பரை 2” பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்சன்ஸ், தி ஷோ பீபுள், ஜீ ஸ்டுடியோ ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என நடிகர் ஆர்யா சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், இப்படத்தை தயாரிக்க ₹80 கோடி செலவாகும் என்ற கூறப்பட்டதாகவும் இதனால், ஜீ ஸ்டுடியோஸ், இப்படத்தில் இருந்து வெளியேறியதால் தற்காலிகமாக பட தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.