Tuesday, October 29, 2024

‘இருப்பு கை மாயாவி’ படம் எப்போது? நடிகர் சூர்யா சொன்ன பதில்! #IRUMBU KAI MAYAVI

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ‘கங்குவா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து, சூர்யா தனது 44வது படமாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். மேலும், அவர் அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 45’ படத்தில் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘இரும்பு கை மாயாவி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் லோகேஷ் கனகராஜின் கனவு திட்டம் என்றும், பல்வேறு நேரங்களில் அவர் இதைப் பற்றிக் கூறியுள்ளார். இப்படம் பேண்டஸி கதைக்களம் கொண்டதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

சமீபத்தில், ஒரு பேட்டியில் சூர்யா ‘இரும்பு கை மாயாவி’ படம் குறித்து கருத்து தெரிவித்தார். அதில் அவர், ‘இப்படம் எனக்கு திரும்பி வருகிறதா அல்லது வேறு பெரிய நடிகருக்கு செல்லுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் இருவரும் இந்த படத்தை பண்ண வேண்டும் என்றுதான் இருக்கிறோம் தயாரிப்பாளர்களும் காத்துக்கொண்டு உள்ளனர் அதேசமயம் லோகேஷ் கனகராஜூக்கு கமல்ஹாசன் சார் மற்றும் ரஜினிகாந்த் சாருடன் பெரிய கமிட்மென்ட்கள் உள்ளன. நான் இதற்கு நடுவில் மூன்று படங்களில் நடிக்கிறேன் சிலசமயம் இரண்டு ஆண்டுகள் எடுக்கும் சில சமயம் 4 மாதங்கள் எடுக்கும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News