கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் “காந்தாரா” படம் 1990களில் நில உரிமை பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவானது. கன்னடத்தில் வெற்றி பெற்றதோடு, தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியான இப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இப்படத்தின் மூலம் ரிஷப் ஷெட்டி தேசிய விருதை வென்று கவனம் பெற்றார். அதன் தொடர்ச்சியாக, “காந்தாரா சேப்டர் – 1” என்ற இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய தகவல்களின் படி, காந்தாரா சேப்டர் – 1 சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸில் ரிஷப் ஷெட்டி, 1000 போர்வீரர்களுடன் மோதும் அதிரடியான காட்சி இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.