இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் டியூட். இப்படத்தில் மமிதா பைஜூ, நேஹா ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வெளியாகி மூன்று நாட்களில் 66 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
