தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர், ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘அனிமல்’, ‘புஷ்பா-2′, ‘சாவா’ போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாக இருக்கின்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான‘தி கேர்ள் பிரண்ட்’ படமும் ராஷ்மிகா மந்தனாவின் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது.இந்த நிலையில், ‘தி கேர்ள் பிரண்ட்’ படம் 2வது வாரத்தில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


