பாலிவுட் நட்சத்திர நடிகை தீபிகா படுகோன் எட்டு மணி நேர வேலை நேரத்தை மற்ற எல்லா இடங்களிலும் போலவே திரையுலகிலும் பின்பற்ற வேண்டும் என்று தனது கருத்தை கூறி வருகிறார்.

இவர் கல்கி 2 மற்றும் ஸ்பிரிட் படங்களில் இருந்து வெளியேறியதற்கான காரணம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், நடிகை ஷாலினி பாண்டே சமீபத்தில் தீபிகாவின் கோரிக்கைக்கு பதிலளித்தார். அவர் கூறியது, “எனக்கு தீபிகா படுகோன் மிகவும் பிடிக்கும். பள்ளி பருவத்திலிருந்தே அவரை பார்த்து வருகிறேன். அவர் சிறந்த நடிகை. தேவையானதைப் பற்றி பயமின்றி பேசுகிறார். மன ஆரோக்கியமும் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறார். அவர் விரும்புவதை வழங்க வேண்டும்” என்கிறார்.
ஷாலினி பாண்டேவின் முதல் படம் அர்ஜுன் ரெட்டி மிகவும் பிரபலமானது. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.