Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

30வது ஆண்டு திருமண பந்தத்தை எட்டுவோம் என நம்பியிருந்தோம்… விவாகரத்து குறித்து ஏ‌ஆர்.ரகுமான் உருக்கமான பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திரங்கள் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் போன்றோரின் விவாகரத்து செய்திகளுக்குப் பிறகு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அந்த வரிசையில் சேர்ந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்திடும்போது சண்டை, சச்சரவு போன்ற செய்திகள் வெளியாவதே வழக்கம். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இடையே இதுவரை எந்த பிரச்சினையையும் மக்கள் அறியாத நிலையில், சாய்ரா பானுவின் திடீர் பிரிவு அறிவிப்பு இந்திய சினிமாவை ஆச்சரியமடையச் செய்துள்ளது.

29 ஆண்டுகள் நீண்ட திருமண வாழ்க்கை முறிந்த நிலையில், ரஹ்மான் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், 30வது ஆண்டு திருமண பந்தத்தை எட்டுவோம் என நம்பியிருந்தோம். ஆனால், எதிர்பாராத முடிவுகள் ஏற்பட்டுவிட்டன. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். இச்சிதறலில் உடைந்த துண்டுகள் ஒன்றாக சேரமுடியாவிட்டாலும், அர்த்தத்தை தேடி வருகிறோம். எங்களின் தனியுரிமைக்கு மதிப்பு அளிக்கவும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News